close
Choose your channels

பிப்ரவரியில் வெளியாகும் ஷங்கரின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு

Sunday, December 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன்2 ’மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடித்து வரும் ’ஆர்சி 15’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இரண்டு படங்களையும் அவர் மாறி மாறி இயக்கி வருகிறார் என்பதும் இரண்டு படங்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் முடிவடைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷங்கரின் தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’அநீதி’. பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகி இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில் காளி வெங்கட் , வனிதா, சாரா அர்ஜூன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் 2023ம் ஆண்டு பிப்ரவரியில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos