வெறும் ராஜமெளலி அல்ல, மஹா ராஜமெளலி: 'ஆர்.ஆர்.ஆர்' படம் குறித்து பிரமாண்ட இயக்குனர்

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான பிரமாண்டமான திரைப்படமான ‘ஆர்.ஆர்.ஆர்’ நேற்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் இந்த படம் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பல பாசிட்டிவ் விமர்சனங்களும், ஒரு சில கலவையான விமர்சனங்களும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

எஸ்எஸ் ராஜமெளலியின் பிரம்மாண்டம் படத்தின் பல இடங்களில் இருப்பதால் இந்த படம் நிச்சயம் பாகுபலி, பாகுபலி 2 போலவே ஒரு வெற்றிப்படம் தான் என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் பார்த்த திரையுலகப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் எஸ்எஸ் ராஜமெளலி உள்பட ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் திரை உலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது வாழ்த்துக்களை ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினர்களுக்கு தெரிவித்துள்ளார். குறிப்பாக அவர் தனது டுவிட்டரில் ராஜமௌலியை மகா ராஜமௌலி எனப் புகழ்ந்துள்ளார். அவர் கூறியதாவது:

காலம் காலத்துக்கு எதிரொலிக்கப் போகும் கர்ஜனை… இந்த மாதிரி ஈடினையில்லாத ஒரு அனுபவத்தைக் கொடுத்த படக்குழுவுக்கு நன்றி. ராம்சரணின் ரேஜிங்கான நடிப்பு , ஜுனியர் என் டி ஆரின் இதயத்தைக் கவரும் நடிப்பு. உங்கள் கற்பனை ஈடு செய்ய முடியாதது ’மஹா’ராஜமௌலி’

More News

ஏ.ஆர்.ரஹ்மானின் துபாய் ஸ்டுடியோவில் தமிழக முதல்வர்: வைரல் புகைப்படங்கள்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துபாயில் உள்ள ஏஆர் ரகுமானின் இசை ஸ்டூடியோவுக்கு சென்றுள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. 

மாஸ்டர் நடிகரின் படத்திற்காக பாட்டு பாடிய ஜீவி பிரகாஷ் - சிவாங்கி!

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் நடித்த மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக ஜிவி பிரகாஷ் மற்றும் சிவாங்கி பாடிய பாடல் ஒன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

5 வது காதலுக்கு இடையூறு: ஒரு வயது குழந்தைக்கு மது கொடுத்து கொலை செய்த படுபாதக தாய்!

ஐந்தாவது காதலுக்கு இடையூறாக இருந்ததால் மூன்றாவது காதலனுக்கு பிறந்த ஒரு வயது குழந்தையை மது கொடுத்து கொலை செய்த படுபாதக தாய் ஒருவர் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராம்சரண்-ஜூனியர் என்.டி.ஆரை இணைத்த ராஜமெளலி, ரஜினி-கமலை இணைப்பாரா? மாஸ் தகவல்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரையும் ஒரே படத்தில் இணைத்த சாதனையை ராஜமௌலியை தவிர வேறு யாராலும் செய்திருக்க முடியாது

தனுஷ்-செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்தின் மாஸ் தகவல்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மாஸ் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.