வேலைக்காரியை முத்தமிட்ட கணவரை சாத்து சாத்து என சாத்திய ஷில்பாஷெட்டி

  • IndiaGlitz, [Thursday,May 14 2020]

இந்த லாக்டவுன் நேரத்தில் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைப்பக்கத்தில் வித்தியாசமான வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்கள் என்பதும், அவை ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன்னர் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஷில்பா ஷெட்டி பிசியாக வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது அவரது கணவர் ராஜ் குந்த்ரா முத்தம் கொடுக்க வருகிறார். அப்போது ஷில்பா ஷெட்டி அவரை தடுத்து தான் வேலையில் இருப்பதாகவும் இந்த நேரத்தில் முத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் கூறுகிறார்

அப்போது அங்கே இருக்கும் வேலைக்காரி ’நல்லா புரியும் படி சொல்லுங்க, நானும் பல தடவை சொல்லிவிட்டேன் கேட்க மாட்டேன் என்கிறார்’ என்று கூற, அதன் அர்த்தத்தை புரிந்துகொண்ட ஷில்பா ஷெட்டி தனது கணவரை சாத்து சாத்து என சாத்துகிறார். இந்த வேடிக்கையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விட்டது. இந்த வீடியோ வெளியான ஒரு சில மணிநேரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பதும் ஷில்பா ஷெட்டியின் தங்கை உள்பட பலர் இந்த வீடியோவுக்கு காமெடியான கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

மேலும் ஒன்றரை மாதங்களுக்கு ரயில் சேவை ரத்து: பொதுமக்கள் அதிர்ச்சி

மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் ஞாயிறுடன் முடிவடைய உள்ள நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்தியாவில் 78ஆயிரமாக உயர்ந்த கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் சுமார் 4000 பேர்!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்து கொண்டே உள்ளது. சற்றுமுன் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி

முதலிடத்தை நோக்கி நகர்கிறது தமிழகம்: கமல்ஹாசன் கிண்டல்

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் மத்திய மாநில அரசுகளை விமர்சனம் செய்து வருகிறார்

அவகிட்ட இந்த கேள்விய கேட்டிருந்தா செருப்பால அடிக்க சொல்லியிருப்பா? ஆண்ட்ரியா

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நேரத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரித்து உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

'மாஸ்டர்' படத்தில் கார் சேஸிங் காட்சி: பிரபல நடிகையின் மறக்க முடியாத அனுபவம்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் நாயகி மாளவிகா மோகனன் தான் என்றாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகை ஆண்ட்ரியா நடித்து உள்ளார்.