close
Choose your channels

வடிவேலுவின் அடுத்த படத்தில் ஷிவானி நாராயணன்!

Friday, January 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணனுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

ஏற்கனவே அவர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி விஜய் சேதுபதியின் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்திலும் ஷிவானி நாராயணன் தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் வெற்றி நடிப்பில் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் ’பம்பர்’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஷிவானி ஒப்பந்தம் ஆனார் என்பதும் ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கும் அடுத்த திரைப்படமான ’வீட்ல விசேஷங்க’ என்ற படத்திலும் ஷிவானி நாராயணன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வடிவேலு நடித்து வரும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் ஷிவானி நாராயணன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஷிவானி நாராயணனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது அவரது ஆர்மியினர்களுக்கு குஷியான தகவல் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.