40 வயதா இவருக்கு? 'சிவாஜி' பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ்!

  • IndiaGlitz, [Wednesday,May 31 2023]

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஸ்ரேயா சரண் தனது லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயது மட்டுமே குறையவே இல்லை என்பதுபோன்ற கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ திரைப்படத்தில் அறிமுகமாகி பின்னர் நடிகர் ஜெயம் ரவி, தனுஷ், விஜய் என்று முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ திரைப்படம் இவருக்கு புது அடையாளத்தையே கொடுத்தது. இதனால் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களிலும் வாய்ப்புகள் குவித்து முன்னணி நடிகையானார்.

இந்நிலையில் பிரபல ரஷ்ய டென்னிஸ் வீரரான ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை காதலித்து கடந்த 2018 இல் திருமணம் செய்துகொண்டார். மேலும் கொரோனா நேரத்தில் இந்தத் தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தததையும் அவருக்கு ‘ராதா’ என்று பெயரிட்டதையும் பின்னர் அறிவித்து இருந்தனர்.

திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் கவனம் செலுத்திவந்த நடிகை ஸ்ரேயா சரண் தொடர்ந்து பிசியாகவே நடித்து வருகிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் ‘மியூசிக்கல் ஸ்கூல்‘ திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதைத்தவிர தமிழில் ‘சண்டைக்காரி’, ‘நரகாசூரன்’, போன்ற ஒருசில திரைப்படங்களிலும் தெலுங்கில் ‘ஆடா நாடே வேட நாடே’ எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

சினிமாவைத் தவிர பேஷன் விஷயத்தில் படு ஆர்வம் காட்டிவரும் நடிகை ஸ்ரேயா சரண் அவ்வபோது விருது விழாக்களில் கலந்துகொண்டு ரசிகர்களை மிரள வைக்கிறார். இந்நிலையில் தற்போது வெள்ளை நிற ஷார்ட் கவுன் அணிந்து நடிகை ஸ்ரேயா சரண் போட்டோஷுட் நடத்திய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு 40 வயது என்றால் யாரும் நம்பவே முடியாது?‘, ‘இவருக்கு சினிமா வாய்ப்புத் தாருங்கள்‘ என்பது போன்ற கருத்துகளை ரசிகர்கள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

More News

83 வயதில் 29 வயது காதலி மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கும் பிரபல நடிகர்!

காட்ஃபாதர் திரைப்படத்தில் நடித்து உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஒருவர் 83 வயதில் 29 வயது காதலியோடு இணைந்து குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கிறார்.

சினிமாவில் ஹீரோவாகும் இளம் கிரிக்கெட் வீரர்… அவரே சொன்ன தகவல் என்ன தெரியுமா?

இந்தியக் கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வரும் இளம் வீரர் ஒருவர் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜடேஜாவுக்கு பிடித்த தமிழ்ப்பாட்டு.. அஸ்வின் வெளியிட்ட தகவல்..!

ஜடேஜா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஒரு தமிழ் பாட்டு மிகவும் பிடிக்கும் என்று அவர் மைதானத்தில் இருந்தபோது டிஜே அந்த பாட்டை போட்டு அவரை மகிழ்வித்தார் என்றும் வீடியோ ஒன்றின் மூலம்

ஒரு நூற்றாண்டுக்கு இந்த ஸ்டில்லை மறக்க முடியாது: இன்ஸ்டாகிராம் முகப்பு பக்கததை மாற்றிய ஜடேஜா..!

ஐபிஎல் இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் டைட்டில் பட்டம் வென்ற நிலையில் இந்த டைட்டில் பட்டம் பெற முக்கிய காரணமானவர்களில் ஒருவர் ஜடேஜா

முதல் நாள் பள்ளிக்கு சென்ற மேக்னா ராஜ் மகள்.. நெகிழ்ச்சியான பதிவு..!

நடிகை மேக்னா ராஜ் தனது மகன் முதல் நாள் பள்ளிக்குச் சென்ற புகைப்படத்தை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.