close
Choose your channels

முதல் நாள் பள்ளிக்கு சென்ற மேக்னா ராஜ் மகள்.. நெகிழ்ச்சியான பதிவு..!

Wednesday, May 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மேக்னா ராஜ் தனது மகன் முதல் நாள் பள்ளிக்குச் சென்ற புகைப்படத்தை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை மேக்னா ராஜ். அவர் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தபோது திடீரென சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் காலமானார். இதையடுத்து அவருக்கு சிரஞ்சீவி சார்ஜா புகைப்படம் முன்பே வளைகாப்பு நடத்தப்பட்டது என்பதும் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த குழந்தைக்கு ராயன் ராஜ் என்று பெயர் வைத்தார் மேக்னராஜ்.

இந்த நிலையில் அவ்வப்போது தனது மகனின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் மேக்னா ராஜ், தற்போது ராயன் ராஜ் பள்ளி செல்லும் வயதை எட்டி உள்ளதை அடுத்து முதல் முறையாக தனது மகன் பள்ளிக்கு செல்லும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

நாம் பெற்றோர் ஆகிவிட்டால் குழந்தைகள் மட்டுமல்ல பெற்றவராகவும் நாமும் மைல்களை கடக்கிறோம். இன்று அத்தகைய ஒரு சிறப்பான நாளாகும். ராயன் பள்ளிக்கு செல்லும் முதல் நாள். நான் கடந்து வந்த உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கல்வி, அறிவு மற்றும் மிக முக்கிய வாழ்க்கை பாடங்களை நோக்கி எனது மகனின் முதல் படி இன்று ஆரம்பிக்கிறது. உங்கள் அனைவரின் ஆசிகளும் வாழ்த்துக்களும் வேண்டும்’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.