close
Choose your channels

மாஸ் நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்: பிறந்த நாளில் கிடைத்த ட்ரீட்!

Thursday, January 28, 2021 • தமிழ் Comments

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாஸன் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ஏராளமான ரசிகர்கள் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் பிறந்தநாள் ட்ரீட் ஆக மாஸ் நடிகர் ஒருவரின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை ஸ்ருதிஹாஸன் பெற்றுள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய படங்களின் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி உலக புகழ் பெற்றவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிக்கும் அடுத்த படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இந்த படத்திற்கு ’சலார்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் எனப்வர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை பிரபாஸ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடிக்கவிருப்பதை தான் மிகவும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பு சுருதிஹாசனுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றும் பிறந்த நாளில் அவருக்கு கிடைத்த ட்ரீட் என்றும் கூறப்படுகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz