close
Choose your channels

லண்டனில் இருந்து இப்போதைக்கு வருவதாக இல்லையா? பிரியங்கா மோகனின் வைரல் புகைப்படங்கள்!

Monday, July 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை பிரியங்கா மோகன் கடந்த சில மாதங்களாக வெளி நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் துபாய் உள்பட அவர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

குறிப்பாக நெல்சன், கவின், உள்பட சிலருடன் துபாய் சென்ற பிரியங்கா அதன் பின்னர் அவர் தனியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். துபாயை அடுத்து அவர் லண்டன் சென்றுள்ளதாகவும் அங்கு தனது தோழிகளுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார் என்பதையும் பார்த்தோம்.

மேலும் இன்னும் அவர் லண்டனில் இருக்கிறார் என்பதற்கு அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்களை சாட்சியாக உள்ளது. சமீபத்தில் அவர் லண்டனில் உள்ள முக்கிய இடங்களில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் இப்போது லண்டனில் இருந்து திரும்புவதாக உத்தேசம் இல்லையா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் பிரியங்கா மோகன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போதுதான் அவர் லண்டனில் இருந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் ’தளபதி 67’ படத்திலும் பிரியங்கா மோகன் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.