சாய்பல்லவிக்கு மிரட்டல்: சிம்பு, தனுஷ் நடிகை ஆதரவு!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
சமீபத்தில் சாய்பல்லவி பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையான நிலையில் அவருக்கு மிரட்டல் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு, தனுஷ் படங்களில் நடித்த நடிகை, சாய் பல்லவிக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் கலந்து கொண்டு பேசிய போது சாய்பல்லவி, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் காட்டப்படும் காஷ்மீர் பண்டிதர்கள் படுகொலை மற்றும் இந்தியாவில் மாடுகளை கொண்டு சென்ற இஸ்லாமிய இளைஞரை ஜெய்ஸ்ரீராம் சொல்ல வேண்டும் என வற்புறுத்தியது ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு இரண்டுமே தவறு என்று பேசியிருந்தார். சாய்பல்லவியின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன என்றும், மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவிக்கு மிரட்டல் விடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும் உண்மையை உரக்கச் சொன்ன நடிகை சாய் பல்லவிக்கு எனது பாராட்டுக்கள் என்றும் சிம்புவின் ’குத்து’ தனுஷின் ’பொல்லாதவன்’ உள்பட பல படங்களில் நடித்த நடிகை ரம்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments