close
Choose your channels

சிம்புவின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி!

Sunday, November 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகிய ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும், இந்த படத்துக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிம்பு தற்போது ’வெந்து தணிந்தது காடு’, ’பத்து தல’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் அவர் நடித்து முடித்துள்ள ’மஹா’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மஹா’ படத்தின் சிங்கிள் பாடல் டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜமீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும், அவருக்கு இது 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.