close
Choose your channels

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் சூப்பர் அப்டேட்!

Monday, October 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மும்பை செல்வதாக சிம்பு விமானத்தில் செல்லும்போது எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

மும்பையில் சில நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பின்னர் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் சென்னை வர உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் இதனை அடுத்து அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதி வருகிறார். கவிஞர் தாமரை பாடல் வரிகளில், சித்தார்த்தா நுனி என்பவரின் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.