close
Choose your channels

தமிழ் நடிகர்களில் முதல்முறையாக சாதனை செய்த சிம்பு!

Monday, February 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலக நடிகர்களில் முதல் முறையாக ஒரு சாதனை செய்த சிம்புவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலக பிரபல நடிகர்கள் கிட்டத்தட்ட அனைவருமே சமூக வலைதளங்களிலும் பிரபலம் என்பதும் அவர்கள் தங்களுடைய திரைப்படங்கள் மற்றும் சமூக கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ள நிலையில் அவரை வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு நடித்து வந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் நடிகர் சிம்பு சமூகவலைதளத்தில் கணக்கைத் தொடங்கினார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு ஏராளமான ஃபாலோயர்கள் கிடைத்தனர் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் தமிழ் திரை உலகில் உள்ள நடிகர்களில் முதல் முறையாக சிம்புவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் 6 மில்லியன் ஃபாலோயர்கள் இணைந்துள்ளனர். 6 மில்லியன் ஃபாலோயர்கள் பெற்ற முதல் தமிழ் நடிகர் சிம்பு என்ற பெருமையை அவர் பெற்றுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சமீபத்தில் மாநாடு என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த சிம்பு, தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் ’பத்து தல’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களுமே இவ்வருடத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.