மீண்டும் இரட்டை வேடங்களில் சிம்பு!

  • IndiaGlitz, [Friday,October 26 2018]

'மன்மதன்' மற்றும் 'சிலம்பாட்டம்' படங்களை அடுத்து சிம்பு மீண்டும் இரட்டை வேடங்களில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்திற்கு பின்னர் சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் 'விண்ணை தாண்டி வருவாயா மற்றும் 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்கு பின்னர் மீண்டும் சிம்பு, கவுதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் புதிய படம் ஒன்று விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தில்தான் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்றும் முழுக்க முழுக்க கமர்சியல் அம்சங்கள் நிறைந்த படம் இது என்றும் கூறப்படுகிறது.

 

More News

ஜப்பானில் திரையிடப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் - ஜிவி பிரகாஷ் படம்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து

'அர்ஜூன்ரெட்டி' ரீமேக் படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'அர்ஜூன்ரெட்டி' திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் சூப்பர் ஹிட்டாகியது என்பது தெரிந்ததே.

விக்ராந்த் படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதும் விஜய்சேதுபதி

கோலிவுட் திரையுலகில் மிகவும் பிசியான நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. இவருடைய கால்ஷீட் டைரி இரண்டு வருடங்களுக்கு நிரம்பி இருப்பதாக கூறப்படும்

புதிய காட்சிகள் இணைப்பு: வடசென்னை குழுவினர் தகவல்

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் கடந்த ஆயுதபூஜை திருநாளில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

'மீடூ' குறித்து லதா ரஜினிகாந்த் கூறிய கருத்து

தமிழகத்தில் பாடகி சின்மயி தொடங்கி வைத்த மீடூ விவகாரம் கொழுந்து விட்டு எரிய தொடங்கி தினமும் பெரிய மனிதர் போர்வையில் இருக்கும் பலருக்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது.