close
Choose your channels

சென்னை திரும்பிய சிம்பு.. வேற லெவல் லுக்கை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி..!

Thursday, March 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு கடந்த சில மாதங்களாக தாய்லாந்தில் இருந்த நிலையில் தற்போது சென்னை திருப்பி உள்ளார். அவரது லேட்டஸ்ட் லுக் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் வேற லெவல் லுக்கில் இருக்கும் அவரை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிம்பு நடித்த ’பத்து தல’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளதை அடுத்து இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தாய்லாந்தில் இருந்து சிம்பு சென்னை திரும்பி உள்ளார்.

கடந்த சில வாரங்களாக தாய்லாந்தில் அவர் தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்ததாகவும் அவரது அடுத்த படத்தின் லுக் வேற லெவலில் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சென்னை திரும்பிய சிம்புவின் லுக் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அந்த லுக்கை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவில் சிம்பு மிகவும் ஸ்மார்ட்டாக இருப்பதாகவும் அவரது அடுத்த படம் மாஸாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

கமலஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் தான் சிம்பு நடிக்க உள்ளார் என்றும் ’எஸ்டிஆர் 48’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.