close
Choose your channels

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த சிம்ரன்.. 50வது படம் என அறிவிப்பு..!

Thursday, March 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த படம் தமிழில் அவருடைய ஐம்பதாவது படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக கடந்த 2000 ஆண்டுகளில் இருந்தவர் சிம்ரன் என்பதும் அஜித், விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் ’ஈரம்’ இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் ’சப்தம்’ என்ற படத்தில் தற்போது சிம்ரன் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் தமிழில் அவரது 50வது படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஆதி கதாநாயகனாக நடித்துவரும் இந்த திரைப்படத்தில் ஏற்கனவே லட்சுமி மேனன், லைலா, ரெடின் கிங்ஸ்லி நடித்துவரும் நிலையில் தற்போது சிம்ரன் இந்த படத்தில் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

7ஜி பிலிம்ஸ் சிவா மற்றும் ஆல்பா பிரேம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.