close
Choose your channels

சினிமாவுக்கு போகிறார் 'சிறகடிக்க ஆசை' நடிகர்.. திவ்யா துரைசாமி தான் ஜோடியா?

Saturday, April 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் மனோஜ் என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீதேவாவுக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் அண்ணாமலை - விஜயா, முத்து - மீனா, மனோஜ் - ரோகிணி மற்றும் ரவி - சுருதி ஆகிய எட்டு முக்கிய கேரக்டர் மட்டுமே மாறி மாறி இந்த சீரியலில் வந்து கொண்டிருக்கிறது என்பதும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சினிமா வாய்ப்பு கிடைத்தாலும் இந்த சீரியல் முடியும் வரை நான் போக மாட்டேன் என்று முத்து கேரக்டரில் நடித்த வெற்றிச்செல்வன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய நிலையில் அவருடைய அண்ணன் மனோஜ் கேரக்டரில் நடித்த ஸ்ரீ தேவாவுக்கு தற்போது சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது.

ஸ்ரீதேவா நடித்துள்ள திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திவ்யா துரைசாமி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை திவ்யா துரைசாமி ஏற்கனவே ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.