close
Choose your channels

மீண்டும் இணைகிறார்களா முத்து-மீனா? 'சிறகடிக்க ஆசை'யில் திடீர் திருப்பம்..!

Friday, November 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் குறுகிய காலத்தில் இந்த சீரியல் டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்துள்ளது.

இந்த நிலையில் ரவி மற்றும் ஸ்ருதி திருமணம் காரணமாக மீனா வீட்டை விட்டு விரட்டப்படுகிறார், முத்துவும் அதற்கு உடன்படுகிறார். இந்த நிலையில் திடீரென அண்ணாமலைக்கு நெஞ்சுவலி வந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். எல்லாத்துக்கும் காரணம் மீனா தான் என்று விஜயா, முத்துவிடம் தூபம் ஏற்ற முத்துவுக்கு மீனா மேல அதிக கோபம் ஏற்படுகிறது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு அண்ணாமலையை பார்க்க மீனா வரும்போது அவரை விஜயா அடித்து விரட்டுகிறார்.

இந்த நிலையில் ஒரு வழியாக காரை விற்று அண்ணாமலையின் ஆபரேஷன் முடிந்த நிலையில், அவரை வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். அப்போது மீனா எங்கே என்று என அண்ணாமலை கேட்க, மீனா வீட்டு பத்திரத்தை எடுத்து கொண்டு ஓடிப் போய்விட்டார் என்று விஜயா அபாண்டமாக பழி சொல்கிறார்.

ஆனால் அண்ணாமலை, ‘வீட்டு பத்திரம் என்னிடம் தான் இருக்கின்றது என்று கூறியதோடு, ‘மீனா வீட்டுக்கு வந்தால்தான் நான் மாத்திரை சாப்பிடுவேன், சாப்பாடு சாப்பிடுவேன் என்று கூற, அதிர்ச்சி அடைந்த முத்து, வேறு வழியில்லாமல் மீனாவை கூப்பிட்டு வருகிறார்.

வீட்டுக்கு வந்த மீனாவிடம் அண்ணாமலை, ‘நீ இந்த வீட்டு மருமகள், இங்கே உனக்கு இருக்க எல்லாவிதமான உரிமையும் உண்டு’ என்று கூறுகிறார். உடனே காலில் விழுந்த மீனா, என் மேல் எந்தவித தவறும் இல்லை என்கிறார். இருப்பினும் மீனா மீது இன்னும் முத்து கோபமாக உள்ளார். ஆனாலும் மீனா வீட்டுக்கு வந்துவிட்டதால், முத்து - மீனா இடையே மீண்டும் இணக்கமான சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மீனாவை அடித்து விரட்ட வேண்டும் என விஜயா மற்றும் ரோகிணி காத்திருக்க, மீண்டும் அவர் வீட்டுக்கு வந்தது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் எபிசோடுகளில் முத்து, மீனா இணைவார்களா? ரவி - ஸ்ருதி நிலைமை என்ன ஆச்சு? முத்துவின் பாட்டி வீட்டுக்கு வருவாரா? ரோஹினியின் ரகசியம் எப்போது தெரியும்? மனோஜின் பிராடுத்தனம் எப்போது வெளிப்படும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos