close
Choose your channels

பிரபுவுக்கு ஜோடியாக சினிமாவில் நடித்த 'சிறகடிக்க ஆசை' விஜயா.. ஆனாலும் ஒரு துரதிர்ஷ்டம்..!

Friday, April 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் விஜயா என்ற கேரக்டரில் அனிலா நடித்து வருகிறார் என்பதும் அவர் பல வருடங்களாக சீரியலில் நடித்தாலும் இந்த சீரியல் தான் அவருக்கு ஒரு அடையாளத்தை பெற்றுக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த அனிலா ’சின்னதம்பி என்ற சீரியல் தான் நான் முதன்முதலாக தமிழில் நடித்தேன், அந்த சீரியல் தான் எனக்கு அடையாளம் கொடுத்தது, அந்த சீரியலுக்கு கிடைத்த புகழ் காரணமாக தான் நிஜ சின்னத்தம்பி பிரபு சாருக்கு நான் ஜோடியாக ஒரு படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நான் மிகவும் ரசித்து நடித்தாலும் அந்த படம் வெளிவராமல் போய்விட்டது. அது எனக்கு மிகவும் மனது கஷ்டமாக இருந்தது. எனக்கு தமிழ் திரைப்படத்தில் ஒரு படத்திலாவது அடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது, கண்டிப்பாக நடிப்பேன், எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை உடன் கூறியுள்ளார்.

மேலும் அவருடைய கணவர் மலையாள சீரியலில் புரடொக்சன்ஸ் கண்ட்ரோலர் ஆக இருப்பதாகவும் அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கேமராவுக்கு பின்னால் பார்க்கும் வேலை செட்டாகிவிட்டதாகவும் அனிலா கூறினார்.

மேலும் அவர் அனிலாவுக்கு இரண்டு குழந்தைகள் என்றும் பையன் குழந்தை நட்சத்திரமாக ’பாரதிதாசன் காலனி’ தொடரில் நடித்திருந்த நிலையில் அவனுக்கு தற்போது நடிப்பில் ஆர்வமில்லை என்றும் கூறினார். மேலும் தனது மகள் பிளஸ் 1 படிப்பதாகவும் எனது இரண்டு குழந்தைகள் தான் எனக்கு மிகப்பெரிய பலம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.