close
Choose your channels

சிவாவின் 'காசேதான் கடவுளடா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Wednesday, November 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மிர்ச்சி சிவா நடிப்பில் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவான ’காசேதான் கடவுளடா’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாரானது. இந்த நிலையில் இந்த படம் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று கூறப்பட்ட நிலையில் எதிர்பாராத காரணத்தினால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 1972 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’காசேதான் கடவுளடா’ என்ற திரைப்படத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா உள்பட பலர் நடித்து இருந்தனர். 50 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வரும் டிசம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிர்ச்சி சிவா ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, ஊர்வசி, ஷிவாங்கி, புகழ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ் பிரதாப் இசையில் பிரசன்னா குமார் ஒளிப்பதிவில், நாதன் சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment