திரு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்: படப்பிடிப்பு தொடங்கியது

  • IndiaGlitz, [Saturday,August 18 2018]

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அவர் தற்போது 'இன்று நேற்று நாளை' ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் திரு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் திரு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறாரா? என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இதற்கு இயக்குனர் திரு தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு டாகுமெண்டரி படத்தில் பணிபுரிந்து வருவதாகவும், ஒரு நல்ல காரியத்திற்காக இந்த பணியில் இருவரும் இணைந்துள்ளதாகவும் இதுகுறித்த விபரங்கள் மிக விரைவில் வெளியாகும் என்றும் இயக்குனர் திரு கூறியுள்ளார். கரும்பலகை, பள்ளி மாணவர்கள் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்க்கும்போது பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்ச்சி டாக்குமெண்ட்ரியாக இருக்கும் என கருதபப்டுகிறது.

More News

'பியார் பிரேமா காதல்' ஹரிஷ் கல்யாணின் அடுத்த பட இயக்குனர்

'பியார் பிரேமா காதல்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து இந்த படத்தில் நடித்த பிக்பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகிய இருவருக்குமே நல்ல பெயர் கிடைத்தது

பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட்கார்ட் எண்ட்ரி இவரா?

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஒருவர் கூட இன்னும் பார்வையாளர்களின் நன்மதிப்பை பெறாத நிலையில் வைல்ட் கார்டில் வரும் போட்டியாளராவது இந்த நிகழ்ச்சியில் ஜொலிப்பார்களா?

கேரள வெள்ளத்தில் சிக்கிய பிரபல நடிகரின் பெற்றோர்: கதறி அழும் வீடியோ

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' ரிலீஸ் எப்போது?

விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த சிலநாட்களுக்கு முன் 'ஜுங்கா' வெளியாகிய நிலையில் அவரது தயாரிப்பில் உருவான 'மேற்கு தொடர்ச்சி மலை' திரைப்படம் வரும் வெள்ளியன்று அதாவது ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கேரள வெள்ள நிவாரண நிதியாக உதயநிதி வழங்கிய தொகை

கேரளாவுக்கு கடந்த சில நாட்களாக பெரும் சோதனையாக உள்ளது. அம்மாநிலத்தில் பெய்து வரும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பொதுமக்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர்.