close
Choose your channels

'பியார் பிரேமா காதல்' ஹரிஷ் கல்யாணின் அடுத்த பட இயக்குனர்

Saturday, August 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான யுவன்ஷங்கர் ராஜாவின் 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து இந்த படத்தில் நடித்த பிக்பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகிய இருவருக்குமே நல்ல பெயர் கிடைத்தது.

இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை ரஞ்சித் ஜெயகொடி இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த 'புரியாத புதிர்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்து இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது, இந்த படம் தனித்துவமான முறையில் சொல்லப்படும் பயண பின்னணியிலான ஒரு பிடிவாதமான காதல் கதை. ஹரீஷ் கல்யாண் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் அவரது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் இந்த படம் அவரை அடுத்த நிலைக்கு நிச்சயமாக உயர்த்தும். ஷில்பா மஞ்சுநாத் இந்த படத்தின் நாயகியாக நடிக்கிறார். அவருடைய கதாப்பாத்திரமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

மா கா பா ஆனந்த், பாலசரவணன், பொன்வண்ணன் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். ரஞ்சித் ஜெயக்கொடியின் முந்தைய படமான 'புரியாத புதிர்' படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பயண பின்னணியில் உருவாகும் இந்த படம் சென்னையிலும், மிகவும் அழகான லே மற்றும் லடாக் பகுதிகளிலும் படமாக்கப்படுகிறது.

இந்த படத்தின் தலைப்பு மற்றும் சிங்கிள் பாடல் ஒன்றையும் அடுத்த மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மாதவ் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் பாலாஜி கப்பா இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.