close
Choose your channels

பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட்கார்ட் எண்ட்ரி இவரா?

Saturday, August 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஒருவர் கூட இன்னும் பார்வையாளர்களின் நன்மதிப்பை பெறாத நிலையில் வைல்ட் கார்டில் வரும் போட்டியாளராவது இந்த நிகழ்ச்சியில் ஜொலிப்பார்களா? என்ற எண்ணம் பலரிடம் இருந்து வருகிறது.

விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரி இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் 'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்து வந்த ரட்சிதா, பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் 'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்த ரியோ ராஜ் பிக்பாஸ் வீட்டில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. நேற்றுடன் 'சரவணன் மீனாட்சி' தொடர் முடிவடைந்த நிலையில் விரைவில் தனது புதிய பயணத்தை தொடங்கவுள்ளதாக ரியோராஜ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ரியோ இன்று அல்லது நாளை கமல்ஹாசன் முன் பிக்பாஸ் வீட்டில் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.