ஸ்பெஷல் பிரியாணியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. யாருடன் தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


இன்று நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் இன்று காலை முதலே அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வந்தோம்.
இந்த நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்.கே 23’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏஆர் முருகதாஸ், ருக்மணி வசந்த் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டு கார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பிறந்தநாள் பரிசாக சிவகார்த்திகேயன் படக்குழுவினர் அனைவருக்கும் ஸ்பெஷல் பிரியாணி ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அவருடைய பிறந்தநாள் பரிசாக நேற்று அவர் நடித்து வரும் ’அமரன்’ படத்தின் டீசர் வெளியான நிலையில் இந்த டீசர் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments