கமல் ரசிகர்கள் மீது ஏன் புகார் கொடுக்கவில்லை?- சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Monday,October 17 2016]

சிவகார்த்திகேயன் நடித்த படமான 'ரெமோ' மட்டும் வெற்றி பெறவில்லை, பிரபல தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் அவர் அளித்த பதில்களை பார்க்கும்போது அவர் வாழ்க்கையிலும் வெற்றி பெற்றுவிட்டார் என்றும் அவருடைய மெச்சூரிட்டியான பதில் அவருடைய மனித நேயத்தை வெளிக்காட்டும் வகையில் இருந்தது என்றும் நினைக்க தோன்றுகிறது.
இந்த பேட்டியின் ஒரு அம்சமாக கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை விமான நிலையத்தில் கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், 'அந்த சம்பவத்தில் என்னை தாக்கியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வீடியோ இருந்தாலும் நான் புகார் எதுவும் கொடுக்கவில்லை.
என்னுடைய தந்தை ஒரு சிறை அதிகாரி என்பதால் நான் சிறையை நேரில் பார்த்துள்ளேன். சிறை வாழ்க்கை எவ்வளவும் கொடுமையானது என்பதும் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் படும் வேதனையும் எனக்கு தெரியும். புகார் கொடுத்து அவர்களை தண்டிக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் இல்லை. அதனால் தான் என்னுடைய வேலையை பார்க்க நான் சென்றுவிட்டேன்' என்று கூறினார்.
இந்த பேட்டியை எடுத்தவர் முதல் பார்த்தவர்கள் வரை அனைவரும் தெரிந்து கொண்டது ஒரே ஒரு விஷயம்தான். சிவா, எந்த வம்புக்கும் செல்லாதவர், அவர் வேலையை மட்டும் பார்ப்பவர் என்பதுதான்.

More News

ரெமோ, தேவி, றெக்க சென்னை வசூல் விபரங்கள்

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ', பிரபுதேவா நடித்த 'தேவி மற்றும் விஜய்சேதுபதி நடித்த 'றெக்க' ஆகிய படங்கள் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில் இந்த படங்களின் கடந்த வார இறுதி சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

இளம் வெற்றி நாயகி கீர்த்திசுரேஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சிவாஜி கணேசன் நடித்த 'கீழ்வானம் சிவக்கும்' ரஜினிகாந்த் நடித்த 'நெற்றிக்கண்' உள்பட பல படங்களில் நடித்த 80களின் நாயகி மேனகாவின் மகளும், பிரபல நடிகையுமான கீர்த்திசுரேஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

தமிழக வசூலில் 'ரெமோ' செய்த சிறப்பான சாதனை

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் நீண்ட விடுமுறை நாட்களில் வெளிவந்தது.

வியக்க வைக்கும் விஜய்யின் 'பைரவா' படத்தின் வியாபாரம்.

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவு பெறாத நிலையில் இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

முதல்வரின் உடல்நிலையை விசாரிக்க அப்பல்லோ சென்ற ரஜினிகாந்த்

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதியில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.