close
Choose your channels

சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் இதுதான்:

Saturday, February 15, 2020 • தமிழ் Comments

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கிய ’ஹீரோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியானதையடுத்து அவர் தற்போது ’டாக்டர்’ மற்றும் ’அயலான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ’ஹீரோ’ திரைப்படம் தற்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு ’சக்தி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனர் ராஜேஷ் தெலுங்கில் வெளியிட உள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ படத்தையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

’ஹீரோ’ படத்தின் கதை அனைத்து மொழிகளுக்கும் பொதுவானது என்பதால் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து இருக்கின்றோம் என்றும் இந்த படம் தெலுங்கு ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று நம்புவதாகவும் ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz