close
Choose your channels

சிவகார்த்திகேயன் படத்தின் கடைசி ஷாட்.. கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ வைரல்..!

Saturday, May 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அமரன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் நேற்றுடன் இந்த படப்பிடிப்பு முடிவடைந்தது. நேற்று படப்பிடிப்பு முடிவடைந்ததும் படக்குழுவினர் அனைவருக்கும் சிவகார்த்திகேயன் தனது கையாலே பிரியாணி பரிமாறினார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்து வரும் நிலையில் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் ’அமரன்’ படத்தின் கடைசி ஷாட்டை படமாக்கும்போது எடுத்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரர் உடை அணிந்து துப்பாக்கியால் சுடும் காட்சியில் நடித்ததும், அந்த காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சொல்லிக் கொடுக்கும் காட்சியும் உள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’அமரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து கட்டமாக இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்பதால் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு செம்மையான விருந்து காத்திருக்கிறது.

சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் சாய் ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment