close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' குறித்த ஹாட் அப்டேட்

Wednesday, October 16, 2019 • தமிழ் Comments

சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கி வரும் ஹீரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது? என சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த படத்தில் செகண்ட்லுக் வரும் 18ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது
 

Get Breaking News Alerts From IndiaGlitz