சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' : சென்சார் மற்றும் ரன்னிங் டைமின் அதிகாரபூர்வ தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,October 12 2022]

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் தொழில்நுட்ப பணிகள் முழுமையாக முடிவடைந்ததாக தகவல் வெளியானது. மேலும் இந்த படம் அக்டோபர் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ‘பிரின்ஸ்’ வரை படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்களை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். ‘பிரின்ஸ்’ திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். சிவகார்த்திகேயனின் கிட்டத்தட்ட அனைத்து படங்களுமே 'யு’ சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் அந்த வரிசையில் ‘பிரின்ஸ்’ திரைப்படமும் 'யு’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் அதாவது 143 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான ரன்னிங் டைமில் தீபாவளி விடுமுறை நாளில் வெளியாகும் இந்த படம் ’டாக்டர்’ ’டான்’ போல் வெற்றிப் படமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது என்பதும் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

லூசு மாதிரி கேள்வி கேக்குறாங்க..  நீங்க லூசு மாறி பேசாதீங்க.. மகேஷ்வரி - தனலட்சுமி மோதல்!

 பிக் பாஸ் சீசன் 6 கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் போட்டியாளர்கள் அறிமுகத்தை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக சென்று வருகிறது.

நான் நிர்வாணத்தை விளம்பரப்படுத்தவில்லை.. ஒவ்வொரு ஆடையாக கழற்றி எறிந்த பிரபல நடிகை!

 பிரபல நடிகை ஒருவர் தான் அணிந்திருந்த ஒவ்வொரு ஆடையாக கழற்றி எறிந்து நான் நிர்வாணத்தை விளம்பரப்படுத்தவில்லை என்றும் உடை சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றேன் என்றும் பதிவு செய்துள்ளார்.

ஒரே நேரத்தில் ரஜினி, தனுஷ் படங்களில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும்  'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பிரபல நடிகர் ஒருவர், தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்

'சர்தார்' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு: ரன்னிங் டைம் இவ்வளவு தானா?

கார்த்தி நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள 'சர்தார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எங்கள் கூட்டணிக்கு வந்த விக்கி-நயனுக்கு வாழ்த்துக்கள்: கார்த்தி

எங்கள் கூட்டணிக்கு வந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிக்கு வாழ்த்துக்கள் என நடிகர் கார்த்திக் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.