close
Choose your channels

'எஸ்.கே 23' பட ரிலீஸ் தேதியை லாக் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்.. செம்ம வசூலுக்கு வாய்ப்பு..!

Tuesday, March 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்.கே 23’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிகிறது

அடுத்த ஆண்டு சல்மான் கான் படத்தை இயக்க செல்வதால் ஏஆர் முருகதாஸ் இந்த படத்தை இன்னும் ஒரு சில மாதங்களில் இயக்கி முடித்து விடுவார் என்றும் அதன் பின் சல்மான் கான் படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ’எஸ்.கே 23’ படத்தை வரும் தீபாவளி என்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வஸந்த் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஶ்ரீ லக்‌ஷ்மி மூவீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக, இப்படத்தைத் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளைக் கவனிக்க, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டை காட்சிகள் மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்க உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.