close
Choose your channels

விடுமுறை நாளை குறி வைத்த 'எஸ்.கே 20': ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tuesday, May 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்.கே 20’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விடுமுறையை குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்து உள்ளது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் அடுத்த திரைப்படமான ‘எஸ்.கே 20’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினமான ஆகஸ்ட் 31-ஆம் தேதி ‘எஸ்.கே 20’ படம் ரிலீஸ் ஆகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

சிவகார்த்திகேயனின் முந்தைய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் ஹாட்ரிக் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் படமாக ‘எஸ்.கே 20’ இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வரும் ‘எஸ்.கே 20’ படத்தை அனுதீப் இயக்கி வருகிறார். தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர், டிரைலர் ரிலீஸ் விவரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக ராஷிகண்னா நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.