கவின் அடுத்த படத்தின் நாயகி சிவகார்த்திகேயன் பட நடிகையா?

  • IndiaGlitz, [Friday,March 17 2023]

கவின் நடிக்கும் அடுத்த படம் தகவல் குறித்து சமீபத்தில் கசிந்த நிலையில் இந்த படத்தில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நாயகியாக நடித்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

கவின் நடித்த ’டாடா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் வசூல் அளவிலும் சாதனை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடியிலும் வெளியாகி குடும்ப ஆடியன்ஸ்களையும் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் கவின் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை டான்ஸ் மாஸ்டர் சதிஷ் இயக்க இருப்பதாகவும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் அனிருத் இசையமைக்கப் போவதாகவும் கூறப்பட்டதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி ஆக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ ’டான்’ மற்றும் சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களில் நடித்த பிரியங்கா மோகன் தற்போது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, எம் ராஜேஷ் இயக்கும் படம் உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கவின் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பார் என்ற தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ’டாடா’ என்ற ஒரே படத்தின் வெற்றி காரணமாக அனிருத் இசையில் முன்னணி நடிகையுடன் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் கீர்த்தி சுரேஷின் கிளாமர் போட்டோஷூட்.. ரசிகர்களின் நெகட்டிவ் கமெண்ட்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் திரைப்படங்களில் குடும்ப பங்கான வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென கடந்த சில வாரங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை

ஃபுட்பால் மைதானத்தில் அஜித், ஷாலினி மற்றும் ஆத்விக்.. மாஸ் புகைப்படம்..!

நடிகர் அஜித்தின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்த புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக அவருடைய மனைவி ஷாலினி அஜித்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி கொண்டிருக்கின்றன

மும்பை டிராபிக்கில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய டேவிட் வார்னர்… வைரல் வீடியோ!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர்

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த சிம்ரன்.. 50வது படம் என அறிவிப்பு..!

பிரபல இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த படம் தமிழில் அவருடைய ஐம்பதாவது படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

லோகேஷின் LCU பாணியில் PCU.. பிரபல நடிகர் படத்தின் மாஸ் தகவல்..!

ஒரு இயக்குனரின் முந்திய படத்தின் கேரக்டரை அடுத்த படத்தில் புத்திசாலித்தனமாக இணைப்பதை சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று கூறுவது உண்டு. ஹாலிவுட்டில் இது சர்வ சாதாரணமாக