close
Choose your channels

கவின் அடுத்த படத்தின் நாயகி சிவகார்த்திகேயன் பட நடிகையா?

Friday, March 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவின் நடிக்கும் அடுத்த படம் தகவல் குறித்து சமீபத்தில் கசிந்த நிலையில் இந்த படத்தில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நாயகியாக நடித்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

கவின் நடித்த ’டாடா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் வசூல் அளவிலும் சாதனை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடியிலும் வெளியாகி குடும்ப ஆடியன்ஸ்களையும் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் கவின் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை டான்ஸ் மாஸ்டர் சதிஷ் இயக்க இருப்பதாகவும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் அனிருத் இசையமைக்கப் போவதாகவும் கூறப்பட்டதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி ஆக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ ’டான்’ மற்றும் சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களில் நடித்த பிரியங்கா மோகன் தற்போது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, எம் ராஜேஷ் இயக்கும் படம் உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கவின் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பார் என்ற தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ’டாடா’ என்ற ஒரே படத்தின் வெற்றி காரணமாக அனிருத் இசையில் முன்னணி நடிகையுடன் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.