close
Choose your channels

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இயக்குவது இந்த பிரபலமா? செம காம்போ என ரசிகர்கள் உற்சாகம்!

Friday, February 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’டான்’ திரைப்படம் வரும் மார்ச் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதேபோல் அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான ’அயலான்’ திரைப்படமும் இந்த ஆண்டுக்குள் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம் ஒன்றிலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் என்பதும், அதேபோல் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் விக்னேஷ் சிவன் படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சமிருக்காது என்ற நிலையில் ஒரே படத்தில் இருவரும் இணைந்தால் வேற லெவலில் இந்த காம்போ இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்த நிலையில் அந்த படம் திடீரென டிராப் ஆகிவிட்ட நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.