சிபிராஜின் அடுத்த படத்திற்கு உதவி செய்த சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Monday,August 26 2019]

பிரபல நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ் நடித்து வரும் படங்களில் ஒன்று 'ரங்கா'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1982ஆம் ஆண்டு நடித்த படத்தின் டைட்டிலில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 28ஆம் தேதி அதாவது நாளை மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

இந்த படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டு படத்தின் புரமோஷனுக்கு உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தில் சிபிராஜ் ஜோடியாக நிகிலா விமல் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சதீஷ், சுஜாதா பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். ராம்ஜீவன் இசையில் ஆர்வி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை பாஸ் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

நடிகர் சிபிராஜ் இந்த படத்தை தவிர கிஷோர் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாயோன்' மற்றும் அன்பரசன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வால்டர்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் 'சத்யா' பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படம் ஒன்றிலும் சிபிராஜ் தனது தந்தை சத்யராஜ் உடன் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

'நம்ம வீட்டு பிள்ளையின் அடுத்த அட்டகாசமான அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

அனுஷ்காவின் அடுத்த படத்தின் ரிலீஸ், டீசர் ரிலீஸ் குறித்த தகவல்!

பாகுபலி, பாகுபலி 2' ஆகிய இரண்டு பிரமாண்டமான படங்களில் நடித்த அனுஷ்கா அதன்பின் 'பாகிமதி' என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்தார். இந்த நிலையில் அனுஷ்கா

எமிஜாக்சனுக்கு என்ன குழந்தை? அவரே அறிவித்த வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் '2.0', விஜய்யுடன் தெறி' என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த எமி ஜாக்சன், தனது நீண்ட நாள் காதலரான ஜார்ஜ் என்பவரை சமீபத்தில் நிச்சயதார்த்தம்

தேசிய விருதை அடுத்து 'மிஸ் இந்தியா'வை நோக்கி செல்லும் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த 'நடிகையர் திலகம் திரைப்படம்' அவருக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த நிலையில் தற்போது அவர் போனி கபூர் தயாரிப்பில் ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

உங்கள காலி பண்றதுதான் என் பிளான்: சாண்டியிடம் கவின் ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கவினை அவருக்கு நெருக்கமானவர்களே நாமினேஷன் செய்துள்ள நிலையில் கவின் புதிய அவதாரம் எடுத்துள்ளதாக தெரிகிறது