close
Choose your channels

அனுஷ்காவின் அடுத்த படத்தின் ரிலீஸ், டீசர் ரிலீஸ் குறித்த தகவல்!

Monday, August 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய இரண்டு பிரமாண்டமான படங்களில் நடித்த அனுஷ்கா அதன்பின் 'பாகிமதி' என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்தார். இந்த நிலையில் அனுஷ்கா நடித்து வரும் திரைப்படம் 'சைலன்ஸ்'. தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் படப்ப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

மாதவன், அஞ்சலி முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இந்த படத்தை ஹேமந்த் மதுகூர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாலினி பாண்டே ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கோபிசுந்தர் இசையில், ஷானில் குமார் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது

இந்த படத்தின் டீசர் பணிகள் முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் டீசரை அடுத்த மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் வரும் டிசம்பர் அல்லது 2020ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த படத்தை மூன்று மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.