நிறைவடையும் நிலையில் 'ரெமோ' பாடல்கள்

  • IndiaGlitz, [Wednesday,March 30 2016]
பீப் பாடல் பிரச்சனையில் இருந்து கிட்டத்தட்ட மீண்டு வந்துவிட்ட இளம் இசையமைப்பாளர் அனிருத் தற்போது தனது கவனம் முழுவதையும் இசையமைப்பில் செலுத்தி வருகிறார். முதல்கட்டமாக சிவகார்த்திகேயனின் 'ரெமோ' படத்தின் பாடல்களை கம்போஸ் செய்வதில் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டிருந்த அனிருத் தற்போது இந்த படத்தின் பாடல்களை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

'ரெமோ' படத்திற்காக இன்னும் ஒரே ஒரு பாடலை மட்டுமே அனிருத் கம்போஸ் செய்யவுள்ளதாகவும் அந்த ஒரு பாடலையும் இந்த வாரத்திற்குள் அவர் முடித்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் மே இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கும் 'ரெமோ' படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

நீதான் எங்கள் விருது. உனக்கெதற்கு விருது? விவேக்

ஷங்கரின் பிரமாண்ட படமான 'ஐ' படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக உடலை பெருக்கி, சுருக்கி மருத்துவ உதவியுடன் கூடிய பல ரிஸ்க்கான பயிற்சிகள்...

'நூறாண்டு கால' பாடகியின் துயர் துடைத்த விஷால்

நடிகர் சங்க செயலாளர் விஷால் பதவியேற்றதில் இருந்து திரைப்படத்துறையில் பல சாதனைகள் செய்து தற்போது வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு...

'தெறி' படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பதையும் இந்த படம் இவ்வாரத்திற்குள்...

'தெறி' வியாபாரத்தில் நுழைந்தது 'ஐங்கரன்' நிறுவனம்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' திரைப்படத்தின் சென்சார் இந்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும்...

ஹன்சிகா, ஹன்சிகாவாகவே நடித்திருக்கும் படம் எது தெரியுமா?

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா நடித்துள்ள 'உயிரே உயிரே' படம் வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகவுள்ள நிலையில்...