close
Choose your channels

'ஜெயிலர்' செட்டுக்கு சென்ற சிவகார்த்திகேயன்.. ரஜினியை பார்க்காமல் யாரை பார்த்தார் தெரியுமா?

Saturday, November 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.

அதுமட்டுமின்றி இந்த படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று வெளியாகி வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 'ஜெயிலர்’ படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு திடீர் விசிட் அடித்த நடிகர் சிவகார்த்திகேயன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் 'ஜெயிலர்’ படத்தின் இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் என்பதும் இருவரும் இணைந்து ‘டாக்டர்’ படத்தில் பணிபுரிந்தார்கள் என்பது தெரிந்ததே. இந்நிலையில் 'ஜெயிலர்’ படப்பிடிப்பு தளத்திற்கு சிவகார்த்திகேயன் சென்றபோது ரஜினிகாந்த் அன்றைய தினம் படப்பிடிப்பில் இல்லை என்பதால் சிவகார்த்திகேயன் அவரை சந்திக்க இயலவில்லை என கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்’ படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment