ஏ.ஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்: பூஜை புகைப்படம்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் 23 வது திரைப்படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்க இருப்பதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் பூஜை புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அதில் இசையமைப்பாளர் அனிருத் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணி இணைகிறது என்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமாக உள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடித்த 21வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் அவரது 23வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூஜையில் சிவகார்த்திகேயன், முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட ருக்மணி வசந்த்தும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த பூஜையில் அனிருத் கலந்து கொண்டதை அடுத்து அவர்தான் இசையமைப்பாளர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments