விடிய விடிய 'தல அஜித்' படம்: பிரபல தியேட்டர் உரிமையாளர் டுவீட்

  • IndiaGlitz, [Saturday,June 08 2019]

தமிழகத்தில் 24 மணி நேரமும் திரையரங்குகள் இயங்க நேற்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் திரைப்படங்களுக்கு திங்கட்கிழமையே கூட்டம் வருவதில்லை. நார்மல் காட்சிகளுக்கே இந்த நிலை என்றால் விடிய விடிய தியேட்டர்கள் இயங்குவது எப்படி? என்ற கேள்வி ஒருபுறம் உள்ளது.

இருப்பினும் மாஸ் நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் படங்கள் ரிலீஸாகும்போது இனிமேல் அதிகாலை காட்சிக்கு மட்டும் ரசிகர்கள் காத்திருக்க தேவையில்லை. இந்த நடிகர்களின் படங்கள் விடிய விடிய திரையிட்டாலும் தியேட்டர்கள் நிரம்புவது உறுதி.

இந்த நிலையில் சென்னையின் முன்னணி திரையரங்குகளில் ஒன்றான வெற்றி திரையரங்கின் உரிமையாளர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், '24 மணி நேரமும் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து தல அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' படத்தை விடிய விடிய திரையிட திட்டமிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு அன்று தூங்கா இரவுதான்' என்று டுவீட் செய்துள்ளார்.
 

More News

வேட்புமனு தாக்கல் செய்த பாண்டவர் அணி: சுறுசுறுப்பாகும் நடிகர் சங்க தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாண்டவர் அணியில் ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் மீண்டும் அவரவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

'தளபதி 63' படத்தின் ஆச்சரியமான தமிழக வியாபாரம்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை

சசிகுமாரின் அடுத்த படத்தில் இணைந்த சரத்குமார்!

பிரபல நடிகர் சசிகுமார் நடித்த 'நாடோடிகள் 2' மற்றும் 'கென்னடி கிளப்' ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவர் தற்போது நடித்து வரும் படங்களில் கல்பத்ரு பிக்சர்ஸ்

மணிரத்னம் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில், அவர் தற்போது 'பொன்னியின் செல்வன்'

இனிமேல் இந்த தப்பை செய்ய மாட்டேன்: 'டகால்டி' குறித்து சந்தானம்

சந்தானம் நடித்து வரும் 'டகால்டி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.