close
Choose your channels

இனிமேல் இந்த தப்பை செய்ய மாட்டேன்: 'டகால்டி' குறித்து சந்தானம்

Saturday, June 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம் நடித்து வரும் 'டகால்டி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரில் சந்தானம் சிகரெட்டை பற்ற வைப்பது போன்று இருந்தது. ரஜினியின் 'பாபா' மற்றும் விஜய்யின் 'சர்கார்' படங்களின் போஸ்டர்களின் புகைப்பிடிக்கும் காட்சி இருக்கும்போது கொந்தளித்த ஒரு தமிழக அரசியல் கட்சி, 'டகால்டி' பட போஸ்டருக்கு குறைந்தபட்சம் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

இருப்பினும் சமூக நல ஆர்வலர்கள், சமூக வலைத்தள பயனாளிகள் இந்த போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்ததோடு, புகைபிடிக்கும் காட்சியை ஊக்கப்படுத்த வேண்டாம் என சந்தானத்திற்கு அறிவுறுத்தினர்.

இதனையடுத்து சற்றுமுன் சந்தானம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், புகைபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த 'டகால்டி' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கவனக்குறைவாக வெளியிடப்பட்டுவிட்டது. உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் புகைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதை உணர்கிறேன். இனிமேல் என்னுடைய அடுத்த படங்களில் இத்தகைய காட்சிகள் இல்லாமல் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்படும் என உறுதி கூறுகிறேன்' என்று கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.