அலைக்குப் பதிலாக நுரையால் மூடப்பட்ட கடல்… விசித்திரத்திற்குள் இன்னொரு விசித்திரம்!!!

  • IndiaGlitz, [Thursday,December 17 2020]

 

டிவிட்டரில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் நுரைப் பொங்கும் கடலுக்கு நடுவில் ஒரு குடும்பமே சேர்ந்து எதையோ தேடுகிறது. இப்படி தேடிய அந்தக் குடும்பம் நுரைக்கு நடுவில் இருந்து ஒரு நாய்க் குட்டியை மீட்கின்றனர். பின்னர் நிம்மதி அடைந்து அனைவரும் வீடு திரும்புகிறார்கள். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை குறித்து இன்னும் சில அதிரடியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சாதாரணமாக நம் ஊரில் இருக்கும் கடல்கள் எல்லாம் அலைகளை கொண்டிருக்கும். அந்த அலை 4 அடி, புயல் நேரங்களில் 10 அடி வரை எழும்பும். கரைப் பகுதிகளில்தான் இந்த அலை ஓயாமல் எழும்பும். மற்றபடி நம்ம ஊரு கடல்கள் பொதுவாக மாயமான அமைதியைத்தான் கொண்டிருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாலான கடற்கரைகள் மேகங்களைப் போல நுரையால் தழும்பும் எனக் கூறப்படுகிறது.

ஏன் இப்படி நுரை ஏற்படுகிறது என்றால் அந்தக் கடல்களில் வாழும் கடல்பாசி, உப்புத்தன்மை, மாசுப்படுத்தும் கொழுப்பு போன்றவற்றால் அந்த கடற்கரைகள் முழுவதும் நுரையாக மிதக்கிறது. அதோடு இப்படி நுரையால் நிரம்பி வழியும் கடல் முழுவதும் பாம்புகள் ஒளிந்து கொண்டு இருக்குமாம். ஆஸ்திரேலியாவில் உள்ள விலங்குகள் மற்றும் உயிரினங்கள் பெரும்பாலும் விசித்திரமாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

நம்ம ஊரு கடற்கரையில் எங்கோ ஒன்று கடல் பாம்புகளை பார்த்திருப்போம். அதுவும் விஷத்தன்மை குறைவாக உள்ள பாம்புகளாக இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள கடல் பாம்புகள் கடும் விஷத்தன்மை கொண்டதாக இருப்பதோடு பெரும்பாலும் கடலையே ஆக்கிரமித்து விடும் அளவிற்கு பாம்புகளாக நிரம்பி வழியுமாம். அதோடு மெகா சைசில் இருக்கும் எட்டுக்கால் பூச்சிகள் மற்றும் அதிசயமான கடல் வாழ் உயிரினங்களும் அங்கு வாழுமாம்.

இதனால் ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாலான கடற்கரைகளில் மனிதர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. தற்போது வெளியிட்டப்பட்ட வீடியோவானது நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டு உள்ளது. இந்தக் கடல் பகுதியில் விஷப் பாம்புகளைத் தவிர்த்து சிலந்தி, அச்சுறுத்தும் பூச்சி இனங்களும் வாழுகின்றன.

More News

டைனோசர் 2 கால்களுடன் இறகுகூட வைத்திருக்குமா??? புதுவகை உயிரினத்தின் படிமம்!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரேசில் நாட்டின் பழங்கால நீர்நிலை ஒன்றில் இருந்து ஒரு சிறிய வகை டைனோசரின்

கொரோனா காலத்தைப் பயன்படுத்தி… சமையலில் உலகச் சாதனை படைத்த சென்னை சிறுமி!!!

கொரோனா காலத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அர்ச்சனாவுக்கு அனிதா ஆதரவு, பாலாவுக்கு ரியோ ஆதரவு: மாறுகிறதா கூட்டணி!

பிக்பாஸ் வீட்டில் கடந்த பல வாரங்களாக அர்ச்சனாவின் அன்பு குரூப் டாமினேட் செய்து கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் கடந்த 2 வாரங்களாக நடந்த டாஸ்க்கில்

திருமணமான சிலமணி நேரங்களில் மணமகனை கத்தியால் குத்திய நண்பர்கள்: அதிர்ச்சி தகவல்!

திருமணமான சில மணி நேரங்களில் மணமகனை அவருடைய நண்பர்களே கத்தியால் குத்திய சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொலை செய்து மண்டையை பீரிசரில் சேமித்து வைத்த டிவிட்டர் கில்லர்!!! குலை நடுங்கும் சம்பவம்!!!

ஜப்பான் நாட்டில் நடைபெற்ற ஒரு வழக்கின் குற்றவாளிக்கு நேற்று மரணத் தண்டனை வழங்கப்பட்டதை அடுத்தும் அந்த குற்றவாளி மீது பலரும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.