சூரி - சசிகுமாரின் 'கருடன்' கிளிம்ப்ஸ் வீடியோ.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூரி மற்றும் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடித்த ‘கருடன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் படக்குழுவினர்கள் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நடிகர் சூரி தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் ’விடுதலை’ படத்திற்கு பிறகு ’விடுதலை 2’ ’கொட்டுக்காளி’ உள்பட ஒரு சில படங்களில் அவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ‘கருடன்’ என்ற படத்தில் சசிகுமாருடன் சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார் என்பதும் வெற்றிமாறன் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன் புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் சூரியின் அட்டகாசமான காட்சிகள் இருக்கும் நிலையில் இந்த படம் மே 31ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்வி உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், மொட்ட ராஜேந்திரன் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தை கே குமார் என்பவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments