'பொன்னியின் செல்வன்' புரொஜக்டை ஆரம்பித்த ரஜினி மகள்: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Saturday,September 11 2021]

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்து வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே ’பொன்னியின் செல்வன்’ நாவலை வெப்தொடராக உருவாக்கும் முயற்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினி முயற்சித்து வருகிறார் என்று தெரிந்ததே. அதுகுறித்த பணிகளும் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த பணி தற்போது செயல்வடிவம் பெறும் நிலைக்கு வந்துவிட்டதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

ஒவ்வொரு புரோஜக்ட்டும் ஒரு நீண்ட பயணம் என்றும், இந்த நல்ல நாளில் பல்வேறு தடைகளுக்கு பிறகு ’பொன்னியின் செல்வன்’ முதல் அத்தியாயம் ‘புதுவெள்ளம்’ பகுதியை நாங்கள் தொடங்கவுள்ளோம் என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் என்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புரொஜக்ட் குறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அவை வைரலாகி வருகின்றன.

அமரர் கல்கியின் ’பொன்னியின் செல்வன்’நாவலை எந்த அளவுக்கு மணிரத்னம் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் காட்சிப்படுத்த போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

என்னோட உயிர் இப்படி தான் போகணும்: வடிவேலு பேட்டி

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த 10 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அனைத்து பிரச்சனைகளை முடித்து நடிக்க ஆரம்பித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்: மருத்துவமனையில் அனுமதி!

பிரபல நடிகர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: நாயகி இவர்தான்!

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' மாஸ் மோஷன் போஸ்டர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள

'காத்துவாக்குல ரெண்டு காதல்: கலக்கல் அப்டேட் கொடுத்த படக்குழுவினர்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்.