close
Choose your channels

தனுஷூக்கு இளைய சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனம்!

Wednesday, July 28, 2021 • தமிழ் Comments

நடிகர் தனுஷ் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் கொடுத்த நிலையில் தற்போது இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் தனுசுக்கு பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் என்ற நிறுவனம் கொடுத்துள்ளது.

இன்று தனுஷ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிறுவனம்தான் தனுஷ்-சேகர் கம்முலா இணையும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷ் - சேகர் கம்முலா படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தனது டுவிட்டில் குறிப்பிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz