close
Choose your channels

மீண்டும் ஹீரோவான நடிகர் ஸ்ரீகாந்த்.. 'சத்தமின்றி முத்தம் தா' டிரைலர்..!

Saturday, February 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2000 ஆண்டுகளில் பல திரைப்படங்களில் நாயகனாக நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் மீண்டும் நாயகனாக நடித்த ‘சத்தமின்றி முத்தம் தா’ என்ற படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகில் ’ரோஜா கூட்டம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் ’ஏப்ரல் மாதத்தில்’ ’மனசெல்லாம்’ ’பார்த்திபன் கனவு’ ’வர்ணஜாலம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகர் ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்தார். அதன்பின் சில திரைப்படங்களில் குணச்சித்திர கேரக்டர் மற்றும் வில்லன் கேரக்டரில் நடித்த நிலையில் தற்போது ‘சத்தமின்றி முத்தம் தா’ என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து மார்ச் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஒரு பெண் எதிர்பாராத காரணத்தினால் தன்னுடைய பழைய நினைவுகள் முழுவதும் மறந்த நிலையில் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை, அவர் யார் யாரை சந்திக்கிறார்? அவரால் பிறருக்கு ஏற்படும் ஆபத்துக்கள், அவருக்கு ஸ்ரீகாந்த் எப்படி உதவுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக உள்ளது.

ஸ்ரீகாந்த் ஜோடியாக பிரியங்கா திமேஷ் என்பவர் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தை ராஜூ தேவ் என்பவர் இயக்கி உள்ளார். ஜூபின் இசையில் உருவாகிய இந்த படம் ஸ்ரீகாந்துக்கு மீண்டும் ஒரு அட்டகாசமான ரீஎன்ட்ரி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment