close
Choose your channels

ராகவா லாரன்ஸ் வீட்டுக்கு சென்ற ஸ்ரீரெட்டி! ஏன் தெரியுமா?

Sunday, October 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறிய நடிகை ஸ்ரீரெட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது தெரிந்ததே. ஸ்ரீரெட்டி குற்றஞ்சாட்டியவர்கள் ஒருவர் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டை மறுத்த ராகவா லாரன்ஸ், அவருக்கு ஏற்ற கேரக்டர் தன்னுடைய அடுத்த படத்தில் தரவும் தயார் என அறிவித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் வீட்டில் நடந்த ஆடிஷனுக்கு சென்ற ஸ்ரீரெட்டி, அவரது அடுத்த படத்தில் நடிக்க தேர்வும் பெற்றுள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஸ்ரீரெட்டி, தான் ராகவா லாரன்ஸ் வீட்டிற்கு ஆடிஷனுக்காக சென்றதாகவும், அங்குக் பல குழந்தைகளுடன் அன்புடன் அவர் இருப்பதை பார்த்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் தான் ஆடிஷனில் தேர்வு பெற்றதை கூறிய ஸ்ரீரெட்டி அவருடைய அடுத்த படத்தில் தனக்கு நல்ல கேரக்டர் கொடுக்க வாக்குறுதி அளித்ததாகவும் அதுமட்டுமின்றி அந்த படத்தில் நடிக்க தனக்கு அட்வான்ஸ் தொகையும் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை சமீபத்தில் புயலால் பாதிக்கபப்ட்ட ஸ்ரீககுளம் மக்களுக்கு கொடுத்துவிட முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்,.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.