close
Choose your channels

கொரோனா குடும்பத்தின் முதல் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட கதை!!!

Tuesday, April 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா குடும்பத்தின் முதல் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட கதை!!!

 

கொரோனா குடும்பத்தில் இதுவரை 7 வைரஸ்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அதில் கொரோனா – சார்ஸ் வைரஸ் (SARS-CoV), கொரோனா – (MERS-CoV), கொரோனா – Novel Cov19 ஆகிய மூன்று மட்டுமே மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துபவை. மற்ற வைரஸ்களான 229E, NL63, OC43, HK01 ஆகிய நான்கும் மனிதர்களுக்கு பெரிய அளவிலான ஆபத்தை விளைவிக்காது. சிறிய அளவிலான உடல் உபாதைகளை மட்டும் கொடுக்கும் தன்மை உடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜுன் அல்மெய்தா என்ற ஒரு பெண்மணியே கொரோனா குடும்பத்தின் முதல் வைரஸை கண்டுபிடித்து உலகிற்கு அடையாளம் காட்டினார். இவர் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் உதவியுடன் வைரஸ்களை படமாக்கும் இமேஜிங் செய்யும் துறையில் முன்னோடியாக திகழ்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்த ஜுன் அல்மெய்தா ஆரம்பத்தில் Histopathology துறையில் சாதாரண ஆய்வாளராகவே இருந்தார். பின்னர் மைக்ரோஸ்கோப் துறையில் அவர் தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்.

வைரஸ்களின் ஆன்டிபாடிகளை தூண்டி அவற்றை பெரிதான உருவத்தில் புகைப்படும் எடுக்கும் சிறந்த நுணுக்கத்தை இவர் பெற்றிருந்தார். இவர் திறனை உணர்ந்து கொணட் லண்டனில் உள்ள புனித தாமஸ் மருத்துவமனை இவரை பணிக்கு அமர்த்தியது.

அதே நேரத்தில் பிரிட்டனில் இருந்த மருத்துவர் டேவிட் மனிதர்களின் சளியை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளைக் குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்தார். சளியை ஏற்படுத்தும் பெரும்பாலான வைரஸ் கிருமிகளை ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்க முடிந்தது. ஆனால் சில வைரஸ்களை மட்டும் உற்பத்தி செய்ய முடியாமல் மருத்துவர் டேவிட் சவாலைச் சந்தித்தார். இது என்ன வகையான வைரஸாக இருக்கும் என அறிந்துகொள்ள ஆர்வம் கொண்ட மருத்துவர் டேவிட், மாதிரிகளை ஜுன் அல்மெய்தாவுக்கு அனுப்பிவைத்தார். முதலில் அந்த வைரஸ் மாதிரிகளைப் பார்த்த ஜுன் இது பார்ப்பதற்கு இன்ப்ளூவென்சா இருக்கிறது எனக்குறிப்பிட்டு, இது வேறு வகையைச் சார்ந்தது எனவும் தெளிவுபடுத்தினார்.

எலிகளின் கல்லீரல் மற்றும் கோழிகளின் உறுப்புகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் வைரஸ் போல இருப்பதாகவும் ஜுன் குறிப்பிட்டார். ஆனால் இதுவரை சளியை ஏற்படுத்தும் வைரஸ் மாதிரிகளில் இருந்து இது உறுதியாக வேறுபட்டது எனவும் விளக்கம் அளித்தார் ஜுன். இவரின் முதல்கட்ட ஆய்வு முடிவை பல அறிவியல் பத்திரிக்கைகள் ஏற்றுக்கொள்ள மறுத்தன. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் 1965 இல் ஒரு பிரிட்டிஷ் அறிவியல் பத்திரிக்கையில் மருத்துவர் டேவிட் சேகரித்த பி814 சளி மாதிரி குறித்த செய்திகள் வெளியிடப்பட்டன. மருத்துவர் டேவிட், ஜுன் அல்மெய்தா மற்றும் லண்டன் புனித தாமஸ் மருத்துவமனையின் பேராசிரியர் டோனி வாட்டர்சன் ஆகியோர் இணைந்து அந்த மாதிரி புதிய வகை எனவும் விளக்கம் அளித்தனர். மேலும் அந்த மூன்று நபரும் இணைந்து புதிய வைரஸ்க்கு வைரஸ்க்கு கொரோனா எனப் பெயரும் சூட்டினர்.

நுண்ணோக்கியால் பார்க்கும் போது சூரியனின் ஒளிக்கதிர்களைப் போல கூர்மையாக நீட்டிக் கொண்டு இருப்பதால் இந்த வைரஸ் குடும்பத்திற்கு கொரோனா என்ற பெயர் இந்த ஆய்வுக்குழு பெயர் வைத்துள்ளது. கொரோனா வைரஸ்கள் ஒரு ''Enveloped Viruses" என்று சொல்லப்படுகிறது. இதற்கு “எண்ணெய் படலமான உறைக்குள் இருப்பது“ எனப் பொருள்படும். மேலும், கொழுப்பு உறையைக் கொண்டதாக, கிரீடத்தின் கம்பிகளை போன்ற அமைப்பில் இதன் புரதங்கள் அமைந்திருக்கின்றன. புரதங்கள் கிரீடம்போல அமைந்திருப்பதால் அதற்கு கொரோனா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. லத்தீன் மொழியில் கொரோனா என்றால் கிரீடம் என்று பொருள்படும்.

இப்படித்தான் கொரோனாவின் குடும்பம் முதன் முதலாக இந்த உலகத்தை வந்தடைந்தது. அடுத்து சார்ஸ் மெர்ஸ் என்று பெரிய பாதிப்பை ஏற்படுத்திய இந்த கொடூர வைரஸ் தற்போது புதிய வகை கொரோனா நாவல் வைரஸை வெளிப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு நோய்த்தொற்றின்போதும் அந்த வைரஸ்களைப் பற்றியும் அது ஏற்படுத்தும் நோய்த்தொற்றைப் பற்றியும் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆய்வாளர்கள் ஆய்வு செய்து அதைக் கண்டறிந்து வருகின்றனர். நடத்தப்படுகின்ற ஆய்வுகளால் மட்டுமே மருத்துவ உலகம் மனிதர்களை காப்பாற்றிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.