43 வருடங்களுக்கு பின் மீண்டும் களமிறங்கிய சுஹாசினி!

  • IndiaGlitz, [Tuesday,February 19 2019]

நடிகை, இயக்குனர் சுஹாசினி, 43 வருடங்களுக்கு பின் மீண்டும் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடியுள்ளார்.

கடந்த 1976ஆம் ஆண்டு சுஹாசினி 13 வயதாக இருக்கும்போது முதல்முறையாக பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்தினார். சரலாயா பரதநாட்டிய பள்ளியில் முறைப்படி பரதம் பயின்ற சுஹாசினி அதன்பின் தற்போதைய எல்டாம்ஸ் சாலை கமல் வீட்டில் 43 வருடங்களுக்கு முன் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சுமார் 100 பேர் முன்னிலையில் சுஹாசினியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது.

அதன்பின் தற்போது மீண்டும் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் சுஹாசினி நடனம் ஆடியுள்ளார். அவருடைய இந்த நடனத்தை கணவர் மணிரத்னம், பத்மா சுப்பிரமணியம், லட்சுமி வைத்தியநாதன் உள்ளிட்டோர் கண்டு களித்தனர்.

இந்த பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு 43 வருடங்களுக்கு முன் அவருடன் பரதம் பயின்ற சீனியர் சண்முகசுந்தரம் அவர்கள் நடனப்பயிற்சி அளித்துள்ளார் என்பதும், சுஹாசினியின் முதல் அரங்கேற்றத்தின்போது அவருக்கு மேக்கப் போட்ட அதே மேக்கப் கலைஞர் சேதுமாதவன் என்பவர் தற்போதும் அவருக்கு மேக்கப் போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் பதிவு செய்த ஆசிரியை வீட்டுக்கு தீவைப்பு!

புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் ஒவ்வொரு இந்தியனும் பாகிஸ்தான் மீது கடுங்கோபத்தில் உள்ள நிலையில் ஒருசிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில்

போலி திருமண சான்றை வைத்து மிரட்டுவதாக காதலர் மீது தமிழ் நடிகை புகார்

கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'பட்டதாரி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதிமேனன். இவர் இதே படத்தில் நாயகனாக நடித்த அபி சரவணனை காதலித்தார்.

நயன்தாராவின் 'ஐரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தல அஜித்துடன் நயன்தாரா நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த 'Mr.லோக்கல் திரைப்படம்

புல்வாமா தாக்குதலுக்குப்பின் சிறையில் இருந்து விடுதலையான 2107 பாகிஸ்தானிய கைதிகள்!

இந்திய பாதுகாப்பு படையினர் 44 பேர் பலியாக பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத தற்கொலைப்படை காரணம் என்பதால் உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்

புல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை! 

புல்வாமா தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 44 பேர் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தற்கொலைப்படை தாக்குதலால் பலியான நிலையில் மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது