close
Choose your channels

சன் டிவியில் புதிய மெகா தொடர்.. தளபதி விஜய் நண்பருடன் இணையும் 'ஆபீஸ்' ஸ்ருதி ராஜ்..!

Saturday, March 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் மெகா தொடரில் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் ஹீரோவாகவும் ‘ஆபீஸ்’ சீரியலில் நடித்த ஸ்ருதி ராஜ் நாயகியாகவும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘லட்சுமி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த சீரியலின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரும் சீரியல் நடிகருமான சஞ்சீவ் நடிக்க இருக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு தான் தற்போது வெளியாகியுள்ளது.

சன் டிவியில் ப்ரைம் டைமில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகவும் இதில் சஞ்சீவ் ஜோடியாக ’தென்றல்’ ’ஆபீஸ்’ உட்பட பல சீரியல்களில் நடித்த ஸ்ருதி ராஜ் தான் நாயகியாக நடிகை இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியல் ப்ரோமோ வீடியோவில் ’திருமணத்திற்கு பின்னரும் என் குடும்பத்திற்கு தான் என் சம்பளத்தை கொடுப்பேன் என்று ஸ்ருதிராஜ் நிபந்தனை விதிக்க, திருமணத்திற்கு பிறகு என் மருமகள் என் கையில் தான் சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்று சஞ்சவ் தாயார் நிபந்தனை விதிக்க இருவரும் ஒரு கணக்குப் போடும்போது கடவுள் ஒரு கணக்கு போடுவதாக ப்ரோமோ வீடியோவில் காட்சிகள் உள்ளன.

இந்த சீரியல் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் மற்ற சீரியல்கள் போலவே இந்த சீரியலுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.