கூகுள் சுந்தர் பிச்சையின் பூர்வீக வீட்டை விலைக்கு வாங்கியது இந்த நடிகரா? வைரல் தகவல்

  • IndiaGlitz, [Saturday,May 20 2023]

உலக அளவில் பிரபலமான கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை ஒரு தமிழர் என்பதும் அவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் அவர் சென்னையில் வளர்ந்த வீட்டை தமிழ் நடிகர் ஒருவர் விலைக்கு வாங்கியிருக்கிறார் எனும் தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மதுரையில் பிறந்து வளர்ந்த சுந்தர் பிச்சை தனது பள்ளிப் படிப்பை சென்னையில் தான் முடித்திருக்கிறார். அப்போது சென்னை அசோக் நகர் 48 ஆவது தெருவில் அவருடைய அப்பா ரகுநாத பிச்சைக்கு சொந்தமாக வீடு இருந்திருக்கிறது. இந்த வீட்டில்தான் சுந்தர்பிச்சை தனது 20 வயதுவரை வசித்திருக்கிறார். பின்னர் இன்ஜினியரிங் படிப்பிற்காக கோரக்பூர் சென்ற அவர் பின்னர் ஸ்டார்ண்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து தற்போது வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவருடைய அப்பா ரகுநாத பிச்சை மற்றும் அம்மா லட்சுமி ஆகியோரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இதனால் சென்னையில் உள்ள பூர்வீக வீட்டை விற்பனை செய்துள்ளதாகவும் அந்த வீட்டை ‘கதிர்’ எனும் திரைப்படத்தில் நடித்த சி.மணிகண்டன் என்பவர் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் தனது சொந்த பெயரிலேயே ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ‘மீண்டும்’, ‘லெக்பீஸ்’ போன்ற திரைப்படங்களில் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

நடிப்பு, தயாரிப்பு என்பதைத் தவிர நடிகர் சி.மணிகண்டன் ஒரு ரியல் எஸ்டேட் தொழில் அதிபராகவும் இயங்கி வருகிறார். அந்த வகையில் சுந்தர் பிச்சை பிறந்து வளர்ந்த சொந்த வீட்டை தற்போது விலைக்கு வாங்கியுள்ள அவர் அதில் ஒரு வில்லா கட்ட இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் வீடு விற்பனை குறித்து பேசிய அவர், சுந்தர் பிச்சையின் அப்பா ரகுநாத பிச்சை அமெரிக்காவில் இருந்து பத்திர அலுவலங்களுக்கு நேரடியாக வந்து அனைத்து வரிகளையும் கட்டி பொறுமையாக பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார் என்றும் எந்த இடத்திலும் சுந்தர் பிச்சையின் செல்வாக்கை அவர் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ரகுநாத பிச்சை வாங்கிய முதல் சொத்து இது என்பதால் தன்னிடம் பத்திரங்களை ஒப்படைக்கும்போது அவர் கண்கலங்கியதாகவும் கூறினார்.

More News

நம்மூர் அலுவலகத்தில் பீர் குடிக்கலாமா? புதிய விதியால் குஷியான இளைஞர்கள்!

ஹரியானாவில் இயங்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பீர், ஒயின் போன்ற குறைந்த ஆல்கஹால் கொண்ட மதுபானங்களை அருந்துவதற்கும்

நின்று போனதாக சொல்லப்பட்ட ‘எங்கேயும் எப்போதும்‘ பட நடிகரின் திருமணம் குறித்த தகவல்!

தமிழில் வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ போன்ற ஒருசில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்புபெற்ற நடிகர் சர்வானந்தின் நிச்சயதார்த்தம் நின்றுவிட்டதாக சமூகஊடகங்களில்

'பிச்சைக்காரன் 1' - ரூ.500, 1000.. 'பிச்சைக்காரன் 2' - ரூ.2000:  நெட்டிசன்களின் மீம்ஸ் வைரல்..!

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' என்ற திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஒரு சில வாரங்களில் ரூபாயை 500 மற்றும் 1000 செல்லாது என்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கை

'ராகவன் இஸ் பேக்'.. மீண்டும் ரிலீசாகும் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படம்..!

 கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் மீண்டும் வரும் ஜூன் மாதம் டிஜிட்டலில் மெருகூட்டப்பட்டு ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காதலருடன் 'இந்தியன் 2' நடிகை.. திருமணம் எப்போது? வைரல் வீடியோ..!

கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' உள்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் நடிகை தனது காதலருடன் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.